மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் போத்தம்பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயறு வகை சாகுபடி குடித்த ராபி பருவ விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் அமுதன் ஆகியோரின் அறிவுரையின்படி வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி ராபி பருவத்தில் பயறுவகை பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கூறினார்.
மதுரை வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வந்த உதவி பேராசிரியை ஆரோக்கியமேரி விவசாயிகளுக்கு பயறுவகை பயிர்களில் அறுவடை, பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து விவசாயிகள் அதிக லாபம் பெற வழி முறைகளை கூறினார்கள். மேலும் பயறு வகை விதைகளை கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான வசம்பு எண்ணெய் ஒரு கிலோ விதையில் கலந்து சேமித்து வைத்து பயிர்களை வண்டுகளிலிருந்து நீண்டகாலம் பாதுகாத்து வைத்து எனவும் கூறினார்கள். மேலும் துணை வேளாண்மை அலுவலர் புவனேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் சங்கரபாண்டியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.