மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் மதுரை நண்பர்கள் வாலிபால் அணி ரூ 25000 கோப்பை முதல் பரிசை தட்டிச் சென்றது…..

மதுரை – மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கள்ளந்திரி கிராமத்தில் கிராம புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கள்ளந்திரி வாலிபால் மன்றம் சார்பாக 6வது மாநில அளவிலான 2 நாட்கள்வாலிபால் போட்டி நடைபெற்றது. முதல்நாள் போட்டியானது கடந்த சனிக்கிழமை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் நிறைவு நாளான நேற்று விறுவிறுப்பாகவும் பரபரப்பாக நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் இருந்து ராஜபாளையம், சிவகங்கை, திண்டுக்கல், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டுவீரர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய மதுரை நண்பர்கள் வாலிபால் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. அந்த அணிக்கு ரூபாய் 25 ஆயிரம் ஊக்கத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூபாய் இருபதாயிரம் மற்றும் கோப்பை மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரபாண்டி விளையாட்டு அணிக்கு வழங்கப்பட்டது. மூன்று மற்றும் நான்காம் பரிசாக ரூபாய் 20 ஆயிரம் மற்றும் ரூபாய் பத்தாயிரம் முறையே கோப்பைகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை முறையூர் ஊராட்சிமன்ற தலைவர் சுரேஷ், திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முகேஷ் சர்மா, திமுக மதுரை மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணகுமார் கொட்டாம்பட்டி  உள்ளிட்ட பலர் வழங்கினர். மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், சென்னை சங்கம் ஓட்டல் உரிமையாளர் ராஜாங்கம் மற்றும் கள்ளந்திரி ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் வழங்கினர். இந்நிகழ்ச்சிஏற்பாடுகளை கள்ளந்திரி வாலிபால் மன்றம் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »