மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் உப்பாறு உபவடி நிலப்பகுதிற்குட்பட்ட சிவலிங்கம் கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி இன்று நடைபெற்றது. இந்த உழவர் வயல்வெளி பள்ளியில் மதுரை மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இரா.வளர்மதி வரவேற்புரை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் கலந்து கொண்டு நேரடி நெல் விதைப்பின் பயன்கள் பற்றி தெளிவாக விவசாயிகளிடம் விளக்கினார். வேளாண்மை துணை இயக்குநர் ( மாநில திட்டம் ) சுப்புராஜ் நெற்பயிரை தாக்கக்கூடிய பூச்சி நோய்கள் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றியும் விளக்கினார். மதுரை மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியை ஆரோக்கிய மேரி நேரடி நெல் விதைப்பின் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கினார் . வேளாண்மை அலுவலர் செண்பகம் நேரடி நெல் விதைப்பினை செயல் விளக்கமாக விவசாயிகளிடம் எடுத்து கூறினார் . உதவி வேளாண்மை அலுவலர் காசி விதைநேர்த்தி செய்முறையினை செயல்விளக்கமாக செய்து காண்பித்தார் . இப்பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.