மதுரை – கடந்த 10 ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரானா தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் சைக்கிள், மிக்ஸி, குக்கர் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரிசு குலுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா தலைமையில் நடைபெற்றது. குலுக்கல் முடிவில் முடுவார்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னான் என்பவர்க்கு முதல் பரிசாக சைக்கிள்-ம், கல்லணை கிராமத்தை சேர்ந்த இந்துஸ்ரீ என்பவர் 2ம் பரிசாக மிக்ஸி-ம், மூன்றாம் பரிசாக நான்கு நபர்களுக்கு குக்கர்-ம் ஆறுதல் பரிசாக 50 நபர்களுக்கு சில்வர் பாத்திரம் வழங்கப்படுகிறது.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, கல்லனை ஊராட்சி தலைவர் சேது சீனிவாசன் முடுவார்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயமணி, பெரிய இலந்தைகுளம், மேலசின்னம்பட்டி, ஊராட்சி தலைவர்கள் தேவி மகேந்திரன், முருகயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.