மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே ஆலாத்தூர் சமுதாய கூடத்தில் இந்த ஆண்டின் முதல் பாஜக மதுரை புறநகர் மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஜி தலைமையில் புறநகர் மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஜி முன்னிலையில் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி -க்கு வரவேற்பு அளிப்பது, மருத்துவமனை சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலங்களிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் வைப்பது. கொரோனா பெருந்தொற்று நோயைஒழிக்க கொரானா தடுப்பூசி செலுத்தி வரும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி செலுத்துவது , நியாய விலைக் கடைகளில் சுண்டக்கடலை அதிகமாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மேற்கு ஒன்றிய தலைவர் குட்டையன் ஒன்றிய பொதுச் செயலாளர் ஜோதிமணி திருப்பதி மாநில பொருளாளர் ஆலத்தூர் சந்திரபோஸ் பாஜக பொறுப்பாளர் செந்தில்,வழக்கறிஞர் திருமுருகன் மகேந்திரன் மணிவண்ணன் உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்