மதுரை – மதுரை மாவட்டம் நரசிங்கம் கிராமத்தில் வசந்த நகரில் வசந்த நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக புதிதாக கட்டப்பட்ட வசந்த விநாயகர் சுவாமிக்கு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக விமர்சியாக நடைபெற்றது. இதில் தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன் செயலாளர் செல்வம் பொருளாளர் கார்த்திக் துணைத் தலைவர் ரவி துணைச் செயலாளர் திருமலைராஜா, துணை பொருளாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ‘இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந் நிகழ்ச்சியில் நரசிங்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.