மது மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.
போதை பழக்கத்தினால் இளைஞர்கள் சீரழியும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது, மேலும் மதுவினால் வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மது மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் குணசுந்தரி தலைமையில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் மாணவிகள் வேண்டாம் வேண்டாம் மதுபோதை வேண்டாம் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் கோஷங்களை எழுப்பியபடியும் பதாகைகளை ஏந்திய படியும் திருமங்கலம் நகர் பகுதியில் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்