பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அறிவுறுத்தலின்படி மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தின் சார்பாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து ஓபிசி அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பாக இன்று மனித சங்கிலி போராட்டம் மதுரை கட்டபொம்மன் சிலை அருகே நடைபெற்றது. இதில் சுமார் 800க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அணிவகுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் சைக்கிளில் பயணம் செய்து போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். மாநகர் மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்கபெருமாள், ராஜாரத்தினம், மற்றும் ஒபிசி அணி மற்றும் அமைப்புசாரா பிரிவு வர்த்தகபிரிவு பட்டியல் அணி மாவட்ட தலைவர்கள் முறையை மோகன் குமார் ஆனந்தஜெயம் சிதம்பரம் அருண்குமார், சகாதேவன், வெள்ளைச்சாமி, சரவணன் வந்து ஹரிஹரன், மண்டல் தலைவர் சரவணன் மற்றும் நிகழ்ச்சியில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் கட்சியினுடைய மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.