ஒட்டன்சத்திரம் – தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா (கிராம வளர்ச்சி) ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனைப்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் உத்தரவுப்படி 100 சதவீத இலக்கை நோக்கி தொப்பம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன் தலைமையிலும், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி சக்திவேல் முன்னிலையிலும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம் முகாமின் போது தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா (கிராம வளர்ச்சி) ஆய்வு மேற்கொண்டார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரேசன் ஊராட்சி செயலர் தண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இம்முகாமில் மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர் சுருளியாண்டி, சுகாதார ஆய்வாளர் கருப்புச்சாமி, மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார், செவிலியர்கள் பத்மாவதி, புஷ்பலதா அங்கன்வாடி ஆசிரியை திருமாத்தாள், அங்கன்வாடி உதவியாளர்கள் மல்லிகா சின்னத்தாய், கருப்பாத்தாள் தூய்மைப் பணியாளர் சுப்புராஜ்,சாரதா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.