பேரையூர் வட்டம் சேடபட்டியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சேமிப்பு கிடங்கு திறப்பு…

மதுரை மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் பேரையூர் வட்டம் சேடபட்டியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை திறந்து வைத்ததை தொடரந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2019-2020-ன்கீழ், பேரையூர் வட்டம் சேடபட்டியில் (வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் விதைச்சான்றுத்துறை) உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்  அலுவலகக்  கட்டிடம் 620 மீ பரப்பளவிலும் மற்றும் சேமிப்பு கிடங்கு 200 மீ பரப்பளவிலும் என மொத்தம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை விவாயிகள் பயன்பெறும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்கள்.

தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 3 பயனாளிகளுக்கு குதிரைவாலி 10 கி மற்றும் நுண்ணூட்டம் 12.5 கி  ரூ.3,330/- மதிப்பிலும்,  2 பயனாளிக்கு பாசிபயறு 20கி  ரூ.3,960/- மதிப்பிலும்,  1 பயனாளிக்கு நெல்-நுண்ணூட்டம் ரூ.513/- மதிப்பிலும், 1 பயனாளிக்கு நிலக்கடலை 200கி ரூ.20,600/- மதிப்பில் இடுபொருட்களையும் மற்றும் 5 பயனாளிகளுக்கு வெண்டை, தக்காளி, மிளகாய், கத்தரி முதலான நாற்றுக்களையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மொத்தம் 12 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாவட்ட வேளாண்மை இயக்குநர் ஜெ.விவேகானந்தன், மாவட்ட வேளாண்மை கண்காணிப்பு பொறியாளர்  எம்.முகேஷ்குமார், வேளாண்மை துறை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) பி.தனலெட்சுமி, மாவட்ட தோட்டக்கலைத்துறை இயக்குநர் ஆர்.ரேவதி, வேளாண்மை உதவி இயக்குநர் (சேடபட்டி)  சந்திரசேகரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரதீபா, பேரையூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், சேடப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர், உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை) ஜெகதீஸ்வரன்,  உசிலம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி, சேடபட்டி வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் தாஜ்நிஷா மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள்  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »