விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் மூன்று கோவில்களுக்கு மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. திண்டிவனம் வட்டம் பேரணி கிராமத்திலுள்ள செல்வ வினாயகர் , முத்து மாரியம்மன்,செல்லியம்மன் கோவில்களுக்கு கும்பாபிேஷகம் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி வெகு விமர்சையாக நடந்தது. இதையடுத்து மண்டல பூஜைகள்தொடர்ந்து நடந்தது.நேற்று முன்தினம் 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு விநாயகர், முத்து மாரியம்மன், செல்லியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கும்ப கலசம் வைத்து யாக குண்டம் அமைத்து சிறப்பு யாகசாலை பூஜை வழிபாடுகள் நடந்தது. பின்னர் சாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாராதனை நடந்து,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பூஜைகளை பெரியதச்சூர் சிவகுருநாதன் தலைமையில் சிவக்குமார் மற்றும் குழுவினர் செய்தனர்.
இரவு சாமி வீதி உலா நடந்தது. பூஜையில் கிராம முக்கியஸ்தர்கள் ,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் மூன்று கோவில்களுக்கு மண்டலபூஜை நிறைவுவிழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் மண்டலபூஜை நிறைவுவிழாவை முன்னிட்டு செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .