திருவல்லிக்கேணி,மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் காலை, பெரியமேடு, சூளைசை டாம்ஸ், கண்மணி பெட்ரோல் பங்க் அருகே வாகனத் தணிக்கையில் இருந்த போது, அங்கு யமஹா இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை நிறுத்திய போது, ஒருநபர் தப்பியோடவே, ஒருநபரை இருசக்கர வாகனத்துடன் பிடித்து விசாரணை செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் மெத்தம் பெட்டமைன் என்ற போதைப் பொருள் மற்றும் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பேரில், சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வந்த முத்து குமரன், வ/23, த/பெ.வீரகுமார், முல்லை காம்ப்ளக்ஸ், முல்லைநகர், வியாசர்பாடி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிராம் மெத்தம் பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா மற்றும் 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய பர்வேஷ் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல, G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு, ஓட்டேரி, S.S.புரம்,A பிளாக், 5வது தெரு மற்றும் பிரிக்ளின் ரோடு சந்திப்பு அருகே ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.கோபி, வ/48, த/பெ.அன்னையப்பன், S.S.புரம், A பிளாக், 7வது தெரு, ஓட்டேரி, 2.ஆல்பர்ட், வ/43, த/பெ.ரூபன், மீனாம்பாள் சாலை, விவேகானந்தர் நகர், கொடுங்கையூர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.7 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.