திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மதியம் பெரியமேடு, மூர்மார்க்கெட் அருகே கண்காணிப்பு பணியிலருந்த போது, அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த நபரை விசாரணை செய்த போது, முன்னுக்கப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் பெருமளவு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன்பேரில், சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த கண்ணுசாமி, வ/23, த/பெ. ஜெயராஜ், வடக்கு தெரு, கணவாய்பட்டி, உசிலம்பட்டி தாலுக்கா, மதுரை மாவட்டம் என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 6.25 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி மேற்படி கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அதே காவல் குழுவினர் மாலை, மூர்மார்க்கெட் அருகே தீவிரமாக கண்காணித்து, சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த சாலமன், வ/31, த/பெ. முஸ்தபா, கொச்புகூர், தவ்லத்பூர், மைதா மாவட்டம், மேற்கு வங்காளம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.