மதுரை – மதுரை திருமோகூர் ராஜ் சிலம்பம் கலைக்கூடம் ஒருங்கினைப்பாளர் சிவனேஷ்வரி கார்த்திகேயன் மற்றும் சிலம்பம் ஆசிரியர் பாண்டி ஆகியோர் தலைமையில் கிரேட் லெவல் காம்பிடேஷன் மற்றும் டீம் காம்பிடேஷன் சிலம்பம் போட்டி நடைப்பெற்றது, இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக திருமோகூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, கிழக்கு ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம் , மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளரும் இந்தியன் சிலம்பப் பள்ளியின் தலைவரும் மானமணி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர், இப்போட்டியில்
திருமோகூர் சுற்றி உள்ள பகுதியில் இருந்து 5 வயது முதல் 20 வயது வரை உள்ள சுமார் 130 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிபடுத்தினார்கள், இப்போட்டியில் வெற்றிப் பெறும் வீரர் வீராங்கனைகள் இருவர் மாநில அளவில் நடைப்பெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள், போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடையம் வழங்கப்படும், பின்னர் செய்தியாளர்களிடம் மாணவி சிலம்பாட்ட விராங்கனை ஐஸ்வரியா கூறியது,
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்டம் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இளைஞிகள் மத்தியில் சிலம்பம் கற்க்கும் ஆர்வம் அதிகரித்து கொண்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது, சிலம்பம் என்னும் தற்காப்பு கலையில் பல ஆட்டம் உள்ளது, தமிழர்கள் அனைவரும் அனைத்து தற்காப்பு கலையும் கற்று கொள்ள வேண்டும் குறிப்பாக மாணவிகள் , இளைஞிகள் , பெண்கள் கற்றுக் கொள்வதன் மூலம் இச்சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைப்பெறும் அனைத்து துன்பங்களிலும் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம், சிலம்பம் கற்று அதற்க்கான சான்றிதழ்கள் பெரும் மாணவர்களுக்கு 3 சதவிதம் சலுகைகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததற்க்கு சிலம்பம் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.