சென்னை, நந்தம்பாக்கம், ஆற்காடுபேட்டை தெருவில் வசிக்கும் எம்.ஜி.ஆர். (எ) சதிஷ், வ/28, த/பெ.தேவன் என்பவர் மீது S-4 நந்தம்பாக்கம் காவல்நி லையத்தில் 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 2 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில்,சதிஷ் கடந்த 16.06.2022 அன்று துணை ஆணையாளர், புனிததோமையர்மலை காவல் மாவட்டம் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப் போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால் சதிஷ், 13.07.2022 அன்று நந்தம்பாக்கம், ஆற்காடு தெருவில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த பாரதிவேலு என்பவரிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பேசி, கல்லால் தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றது தொடர்பாக, S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
ஆகவே, எதிரி சதிஷ்1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய புனித தோமையர் மலை காவல் மாவட்ட துணை ஆணையாளர், A.பிரதீப், எதிரி சதிஷுக்கு கு.வி.மு.ச. பிரிவு 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 338 நாட்கள் பிணையில் வர முடியாத சிறைதண்டனை விதித்து இன்று (20.07.2022) உத்தரவிட்டார். அதன் பேரில், எதிரி சதிஷ் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில்அடைக்கப்பட்டார்.