கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி குளம் என்ற குளம் உள்ளது. குளமானது சுமார் 500 ஆண்டுகளாக பல விவசாயிகளுக்கு உபயோகப் பட்டு வந்துள்ளது. ஆனால் இப்பொழுது நிர்வாக சீர்கேட்டின் காரணமாக தூர் வாராமல், மனித கழிவு வீட்டில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை பொதுமக்கள் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு உள்ளது. ஆகையால் நிர்வாகம் தலையிட்டு உடனே குளத்தை தூர்வாரி சரி செய்ய வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.