விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த ஒன்றிய பா.ம.க., உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார் . ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சம்பத், கார்த்திகேயன், ஏழுமலை, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சீனுவாசன் வரவேற்றார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது குறித்து மாநில துணை பொதுச் செயலாளர் தங்கஜோதி, மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் புண்ணியக்கோடி, மாநில சமூக ஊடகபேரவை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்று தந்த டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ்,மாநில தலைவர் மணி ஆகியோருக்கும் சட்டமுன் வடிவு செய்த முன்னாள் அமைச்சர் சண்முகம், சட்டமாக நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம், நடைமுறை படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியையும்,இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு மணி மண்டபம் அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
உள்ளாட்சி தேர்தலில் டாக்டர் ராமதாஸ் ஆணை படி அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார், ரமேஷ், அறிவோன் யேசு, செல்வகுமார், வெற்றிவேல், மதியழகன், சுபாஷ், வீரவேல் உட்பட பலர்கலந்து கொண்டனர் . பசுமை தாயக மாவட்ட செயலாளர் தீனவேலு நன்றி கூறினார். விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த ஒன்றிய பா.ம.க., ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் புகழேந்தி பேசினார் .