சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக,R-4 பாண்டிபஜார் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள தனியார் பொழுது போக்கு கிளப்பில் (Recreation Club) ரகசியமாக கண்காணித்த போது, அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் பேரில் மேற்படி இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.பிந்துகுமார், வ/41, த/பெ.தினேஷ்குமார், கீழ்பாக்கம், 2.பிரேம், வ/77, த/பெ. மாணிக்கராஜ், தி.நகர், 3.மாடசாமி, வ/49, த/ப.பாபநாசம், தி.நகர், 4.பிரின்ஸ் தேவகுமார், வ/2, த/பெ.ஜான், திருவான்மயூர் உட்பட 22 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.17,820/- மற்றும் 3 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக R-4 பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 22 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய தலைமறைவு குற்றவாளியான மேற்படி கிளப்பின் உரிமையாளரை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.