திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழனி கல்லூரி வளாகத்தில் பழனி திருக்கோவில் சார்பாகவும் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பாகவும் கலைஞர் தல மரங்கள் நடும் விழா நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் திருக்கோவில் இணை ஆணையர் ந.நடராஜ் உத்தரவின் பேரிலும், கல்லூரி செயலாளர் திருக்கோவில் துணை ஆணையர் (மு.கூ.பொ) செந்தில்குமார் ஆலோசனைப்படியும், கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் ப. பிரபாகர் மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி தல மரங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கல்லூரியின் திருக்கோவில் சிறப்பு அதிகாரி பாண்டி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியப் பண்பாட்டுத்துறைத் தலைவர் முனைவர் சி. ஸ்ரீராஜா, அலுவலக கண்காணிப்பாளர் முனைவர் ப.த.ராஜ்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் க. பழனிச்சாமி, முனைவர் இரா மனோகரன், முனைவர் இரா.கௌதமன், தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் கே.பாக்யராஜ், காந்திய சிந்தனை வகுப்பு பொறுப்பாளர் முனைவர் கி.அசோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கலைஞர் தல மரம் நடும் விழாவினை சிறப்பித்தனர். இதில் ஆல், அரசு, வேம்பு, கடம்பம், அத்தி, தேக்கு, நாவல், மற்றும் புங்கமரக்கன்றுகள் ஆகியவை நடப்பட்டது.