பழனி – அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்ட அணிகள், தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் உள்ளும் வெளியிலும் மாபெரும் தூய்மை பணியை நடத்தியது. இம்முகாமில் கல்லூரி முன்புறம் உள்ள நெடுஞ்சாலைதுறை பகுதிகள், கல்லூரி வளாகம், விடுதி வளாகம் ஆகிவற்றில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள், தேவையற்ற புதர்கள் ஆகியவை அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
இத்தூய்மை முகாம் பணியை கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் ப.பிரபாகர் துவக்கி வைத்தார். துறைத்தலைவர்கள் அனைவரும் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் க.பழனிச்சாமி, முனைவர் இரா.மனோகரன், முனைவர் க.கண்ணதாசன், தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முனைவர் கே.பாக்யராஜ், இளைஞர் நலத்துறை அதிகாரி முனைவர் ரமேஷ் பாபு, செஞ்சுருள் சங்க அதிகாரி முனைவர் இரா. கங்காதரன், உடற்கல்வி துறை பொறுப்பாளர்கள் முனைவர் பி.மணிகண்டன், முனைவர் இரா.கணேசன் ஆகியோர் இம் மாபெரும் தூய்மைப் பணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியாக மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் உறுதிமொழி ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.