பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவினை கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ப.பிரபாகர் துவக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு ஆலோசகர் முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி சர்தார் வல்லபாய் பட்டேல் வரலாறு மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவிற்காக அவர் மேற்கொண்ட பணிகள், தேசிய ஒற்றுமை நாளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் க.பழனிச்சாமி, முனைவர் இரா.மனோகரன், முனைவர் க.கண்ணதாசன், தேசிய மாணவர் படை அலுவலர் கே.பாக்யராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.