ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட சேவைகளின் ஒரு பகுதியாக நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்துதல், இயற்கை உரம் தயாரிக்க மக்கும் திடக்கழிவுகளை சேகரித்தல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் ஈடுபட்டனர்.
முன்னதாக இந்த சேவைப் பணிகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் ப. பிரபாகர் துவங்கி வைத்து சேவைகளின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி, அலுவலகக் கண்காணிப்பாளர் முனைவர் ப.த.ராஜ்குமார் ஆகியோர் மற்றும் 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த தூய்மை இந்தியா சேவை நிகழ்வினை நாட்டு நலப்பணி அணி 138-ன் திட்ட அலுவலர் கி.கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்தார்.