கன்னியாகுமரி – இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் கொறோனா ஊரடங்கு காரணமாக முதல் மண் ஊரடங்கில் சுமார் நான்கு மாதங்கள் படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதுபோல் இரண்டாவது ஊரடங்கும் சுமார் நான்கு மாதங்கள் படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழக அரசின் கட்டுப்பாடு தளர்வுகளல் கடந்த மாதம் படகுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வியாபாரிகள் மகிழ்ச்சி
தமிழக அரசின் உத்தரவின்பேரில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கியது. இதனால் கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் அதிகரித்து வந்தனர். சமீபகாலமாக வெள்ளி மற்றும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் படகு போக்குவரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. இதனால் நடைபாதை வியாபாரிகள் கோயில் வளாக கடைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பியிருக்கும் அனைத்து வியாபாரிகளுக்கும் ஏமாற்றமாக உள்ளது. ஆகையால் வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.