கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜர் ஆலயம் உள்ளது. அங்கு ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆலய வழிப்பாடுக்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்து செல்லும். ஆனால் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை ஆகையால் திங்கட்கிழமை கோவிலின் வாசல் வரை கூட்டம் நிரம்பியது.ஆனாலும் பக்தர்கள் எதிர்ப்பாத்த அசரமர நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். இன்று வெளிமாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். வரும் நாட்களில் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பதற்கு கோயில் நிர்வாகமும் குமரி மாவட்ட ஆட்சியாளர் இதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்..