மும்பை, டிசம்பர் 2021: கோத்ரெஜ் குழுமத்தின் முதன்மை நிறுவனமான கோத்ரெஜ் & பாய்ஸின் ஒரு பகுதியான கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனமானது ஹெல்த் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை நோக்கி நுகர்வோரை மேம்படுத்துவதற்காக தயாரிப்புகளை வலுப்படுத்திவருகிறது. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பிராண்ட் அதன் உறைபனி ஆகாத குளிர்சாதனப் பெட்டிகளின் வரம்பில் மேம்பட்ட ‘நானோ கிருமி நீக்கம் தொழில்நுட்பத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, இதற்காக நிறுவனம் காப்புரிமையையும் தாக்கல் செய்துள்ளது.
இன்று நாம் வாழும் சூழலானது கிருமிகளால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. கிருமிகளை சுத்தம் செய்வதில் நுகர்வோர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். கோத்ரெஜ் அப்ளையன்ஸ் நிறுவனமானது, மக்கள் உட்கொள்ளும் உணவு முடிந்தவரை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது, குறிப்பாக, உணவானது நம்மை அடையும் முன்பே பல கைகள் மாறிவருகிறது, சுற்றியுள்ள காற்று கூட கிருமிகளால் பாதிக்கப்படும் இன்றைய சூழ்நிலை இருந்துவருகிறது. இந்நிலையில், நிறுவனமானது ‘நானோ கிருமி நீக்கம் தொழில்நுட்பத்தினை’ குளிர்சாதனப் பெட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, காற்று ஓட்டக் குழாயில் கிருமி எதிர்ப்பு நானோ பூச்சு ஒன்றைப் பயன்படுத்தி செயல்படுத்துகிறது. இந்தக் குழாயின் வழியாகச் செல்லும் காற்று கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுற்றிச் சுழலும் போது, மூடப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நுண்ணுயிரைக் கொல்கிறது. மேலும், கிருமி உருவாகாமல் தடுக்கிறது. மேலும் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவுப் பரப்புகளை கிருமி நீக்கம் செய்கிறது. குழாயில் 100% மேற்பரப்பு கிருமி நீக்கம் மற்றும் கிருமிகளுக்கு எதிராக சராசரியாக 95%+ உணவு மேற்பரப்பு கிருமி நீக்கம் ஆகியவற்றை இந்த தொழில்நுட்பம் மேற்கொள்கிறது. நுண்ணுயிர் செயல்பாட்டில் தெளிவான குறைப்பு, சிறந்த உணவைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய உதவுவதால், நீண்ட காலத்திற்கு உணவுகள் ஃப்ரெஷாகவும், ஹெல்த்தியாகவும் இருக்கும். குளிரூட்டலுடன் நுண்ணுயிர் வளர்ச்சியைக் குறைக்கும் வழக்கமான குளிர்சாதனப்பெட்டிகளைப் போலல்லாமல், கிருமிநாசினி தொழில்நுட்பம் இடம்பெற்றிருப்பதால் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள காற்றைச் சுத்தப்படுத்துவதில் ஒரு படி மேலே செல்கிறது.
இந்த நவீன தொழில்நுட்பமானது NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேர உணவு மேற்பரப்பு கிருமிநாசினி ஆய்வக சோதனைகள் பொதுவாக காணப்படும் ஈகோலி, சால்மோனெல்லா போன்ற கிருமிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பிற்கு எதிராகவும் மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் பொதுவாகக் காணப்படும் பொருட்களான தக்காளி, வெளிப்பட்ட ரொட்டி, தயிர் மற்றும் வெட்டப்பட்ட ஆப்பிள் ஆகியவற்றின் மேல்பரப்பில் இருக்கும் கிருமியையும் நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் கோத்ரெஜ் அப்ளையன்ஸுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனமானது T-சீரிஸ் ஏர் கண்டிஷனர்களை சிறப்பு நானோ-கோடட் ஆன்டி-வைரல் வடிகட்டுதல் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியது. இது, நானோ பூசப்பட்ட வடிகட்டி மேற்பரப்புடன் உருவாக்கப்பட்டதால், 99.9%* வைரஸ் மற்றும் பாக்டீரியா துகள்களை கிருமி நீக்கம் செய்யும் திறனுடன் வந்தது. அதுபோல, பாக்டீரியா எதிர்ப்பு UV-Ion டெக்னாலஜி, நீராவி கழுவுதல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு வடிகட்டிகள் போன்ற தொழில்நுட்பங்களுடன் ‘கோத்ரெஜ் இயான்’ பாத்திரங்களைக் கழுவும் சாதனமானது பாக்டீரியாவை நீக்குவதோடு, உணவில் இடம் இருக்கும் கிருமிகளை நீக்கம் செய்ய உதவியது. இது, 99.99%+ கிருமிகள்* மற்றும் கோவிட் வைரஸை* கிருமி நீக்கம் செய்யும் ஜெர்ம்ஷீல்டு தொழில்நுட்பத்துடன் கூடிய கோத்ரேஜ் இயோன் மேக்னஸ் வாஷிங் மெஷின்களை 5 ஸ்டார் BEE மதிப்பிடப்பட்டது. கோத்ரெஜ் தடுப்பூசி பாதுகாப்பிற்கான மேம்பட்ட மருத்துவ குளிர்சாதன பெட்டிகளையும், மருத்துவ குளிர் சங்கிலிக்கான மேம்பட்ட உறைவிப்பான்களையும் வழங்குகிறது மற்றும் இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக இது இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, நிறுவனமானது கோத்ரேஜ் விரோஷீல்ட் என்ற UVC அடிப்படையிலான கிருமிநாசினி சாதனத்தை அறிமுகப்படுத்தியது, இது கோவிட் வைரஸ் மற்றும் கிருமிகளை கிட்டத்தட்ட அனைத்து தினசரி பயன்பாட்டு மேற்பரப்பில் இருந்து அகற்றும். (*நிபந்தனைகள் பொருந்தும். godrej.com/Godrej-appliances இல் சோதனை விவரங்களை அறியவும்).
புதிய அறிமுகம் குறித்து, கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் வணிகத் தலைவரும், நிர்வாக துணைத் தலைவருமான கமல் நந்தி பேசும்போது, “ எங்கள் அனைத்து உபகரணங்களின் போர்ட்ஃபோலியோவிலும் எங்கள் நுகர்வோருக்கு சிறந்த சுகாதாரம் மற்றும் சுகாதார தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். அதற்கான, தொழில்நுட்பங்களை தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகிறோம். கடந்த ஆண்டு முதல், கிருமிப் பாதுகாப்பிற்கான அதிநவீன தொழில்நுட்பங்களுடன் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வரிசையில் குளிர்சாதனப் பெட்டிகளுக்குள் உணவு கிருமி நீக்கம் செய்வதற்கான தேவையானது நுகர்வோர்களால் தொடர்ச்சியாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நுகர்வோரின் ஊக்கத்தால் , குளிர்சாதன பெட்டிகளில் நானோ கிருமி நீக்கம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், எங்களின் சந்தை நிலையை வலுப்படுத்தவும், அடுத்த ஆண்டுக்குள் நமது ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் 30% ஹெல்த் சார்ந்த தீர்வுகளை அதிகரிக்கவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்” என்றார்.
கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவன குளிர்சாதனப் பெட்டிகளின் தயாரிப்புக் குழுமத் தலைவர் அனுப் பார்கவா கூறும்போது,” நானோ கிருமி நீக்கம் செய்யும் தொழில்நுட்ப அறிமுகம் இந்திய குளிர்சாதனப் பெட்டித் துறையில் குறிப்பிடத்தக்க மேம்பாடாகும். நானோ கிருமி நீக்கம் செய்யும் தொழில்நுட்பமானது கோத்ரெஜ் இயோன் வல்லோர் மாற்றக்கூடிய குளிர்சாதனப்பெட்டியின் சமீபத்திய புதிய அறிமுகத்திலும் கிடைக்கிறது. இது ஃபிரிட்ஜ் ஃப்ரீசர் 4-இன்-1 கன்வெர்டிபிள் தொழில்நுட்பம் மற்றும் கூல் பேலன்ஸ் டெக்னாலஜி மற்றும் மேம்பட்ட காற்று ஓட்ட வடிவமைப்புடன் வருகிறது, இது உங்கள் உணவுப் பொருட்களை 30 நாட்கள் வரை ஃப்ரெஷாக வைத்திருக்கும். கிருமி நீக்கம் செய்யும் தொழில்நுட்பமானது விரைவில், முழு ஃப்ரோஸ்ட் ஃப்ரீ ரேஞ்சிலும் கிடைக்கும்.” என்றார்.
இந்த சாதனமானது 244-350 லிட்டர் கொள்ளளவுகளில் ரூ. 29,000 துவக்க விலை முதல் சந்தைகளில் கிடைக்கும்.