சென்னை, கண்ணகிநகர், 2 அடுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் சுமதி, பெ/வ.40, க/பெ.சங்கர் என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். சுமதி கடந்த 09.03.2022 அன்று மதியம் சுமார் 02.45 மணியளவில் பணிமுடித்து வீட்டிற்கு செல்ல, கொட்டிவாக்கம், சாமிநாதன் நகர், வேதகிரி தெருவில் நடந்து செல்லும்போது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சுமதியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சுமதி, J-8 நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
J-8 நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, அதில் பதிவான எதிரிகளின் அடையாளங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 1.அருண், வ/22, த/பெ.வேலு, எண்.73, முத்தையா தோட்டம் தெரு, ஐஸ் அவுஸ், சென்னை, 2.அருண்குமார், வ/26, த/பெ.கணேசன், மாவடி விநாயகர் தெரு, இராயப்பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மேற்படி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், எதிரிகள் அருண் மீது ஏற்கனவே J-8 நீலாங்கரை காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கும், அருண்குமார் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் அருண் மற்றும் அருண்குமார் விசாரணைக்குப் பின்னர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.