சென்னை, ஈஞ்சம்பாக்கம், காந்தி தெருவில் வசிக்கும் ஏழுமலை, வ/43, த/பெ.குப்பன் என்பவர் வீட்டின் கீழ்தளத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். ஏழுமலை கடந்த அன்று இரவு மேற்படி கடையை பூட்டிவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் வைத்திருந்த பணம் ரூ.2,000/- திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில், J-8 நீலாங்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
J-8 நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும், மேற்படி திருட்டில் ஈடுபட்ட 1.அஜய் (எ) குள்ள அஜய், வ/19, த/பெ. ஆறுமுகம், 3 அடுக்கு, குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, கண்ணகிநகர், சென்னை 2.கணேஷ்குமார், வ/19, த/பெ.லோகவேல், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1,000/- பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட அஜய் (எ) குள்ள அஜய் மீது ஏற்கனவே J-8 நீலாங்கரை காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் உட்பட மொத்தம் 3 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.