நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் பைப் கம்போஸ்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு மாநகர பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்றைய தினம் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்படி ஞானம் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு பைப் கம்போஸ்டிங் முறையின் பயன்பாடுகள், மற்றும் செயல்முறை விளக்கத்தை மாநகர்நல அலுவலர் விஜய் சந்திரன் அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
நிகழ்வில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.