நாகர்கோவில் பழைய வீடுகளை சீரமைக்க மாநகராட்சி மறுப்பு….

கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இந்தநிலையில் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு கட்டிட வரைபடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு கட்டிட வரைபடம் அனுமதி வழங்க மறுக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் இதனால் பலர் இந்த வீடுகளை புதுப்பிக்க பொதுமக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். நாகர்கோவில் நகராட்சி பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக உள்ளது. தற்போது வாங்கியுள்ள வீட்டுக் கடன்களை வங்கிகளுக்கு செலுத்த முடியாத நிலை உள்ளது. மறுபடியும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளார். நகராட்சி நிர்வாகம் உடனடியாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து 4 மாத காலத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் நாகர்கோவில் நகராட்சி மக்கள் வீடுகளை சீரமைக்க முடியாமல் பெரிதும் துன்பப்படும் நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. ஆகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுமதி கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பழைய வீடுகளை சீரமைக்க விரும்பும் பொதுமக்கள் துயரை துடைப்பதற்கு நாகர்கோவில் நகராட்சி ஆணையர் இதில் தலையிட்டு வீடு சீரமைக்க விரும்பும் பொதுமக்களுக்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காகத்தான் சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கப்படுகிறது இதனை மக்கள் நலனுக்காக பயன்படுத்தி மக்கள் நலனை இடையூறு படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுத்தால் நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு பயன்பாடாக இருக்கும் என்று தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »