தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்..

வருஷநாடு – வருஷநாடு தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டி கிராமத்தில் எழுந்தருளும் காமுகுல ஒக்கலிகர் காப்பு கவுண்டர் பட வனவரு தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஏழுமலையான் தேவிஸ்ரீ சவுடம்மன் மதுவீருஸ்ரீ அக்கமன் சிக்க அம்மன் ஆலயங்கள் புதியதாக கட்டி இன்று நூதன ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக பிறந்த வீட்டுப் பிள்ளை அழைப்பு மாமன் மைத்துனர்களுக்கு மரியாதை செய்தல், முதன்மைகாரர் வீட்டிலிருந்து உற்சவர் சிலை தீர்த்த குடம், முளைப்பாரி, உள்ளூர் அனைத்து கோயில்களுக்கும் சென்று சன்னதியை அடைந்ததும், ஊர்வலத்தின்போது மேளதாளங்கள் முழங்க தேவராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாள் காலை வெள்ளிக்கிழமை 9 15 மணிக்கு மேல் வெகு விமர்சியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனையும் அபிஷேகங்களும் ஆராதனையும் அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வேப்பம்பட்டி படவன வருகுல பங்காளிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »