தேனி – தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அழகர்சாமிபுரத்தில் , CSI சர்ச் தடுப்பூசி முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் சாந்தி கணேஷ் மருத்துவர், சுகாதார பணியாளர்களும் கலந்து கொண்டனர் .பெரியகுளத்தில் உள்ள அணைத்து அங்கன்வாடிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.ஒன்றிய பகுதிகளில் பொம்மிநாயக்கன்பட்டியில் ஒன்றிய குழு தலைவர் தங்கவேலு தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. எருமலைநாயக்கன்பட்டி யில் முதலில் வரும் நபருக்கு செல்போன் ஒன்றும் இரண்டாம் பரிசு கிரைண்டர் ஒன்றும் மூன்றாம் பரிசு மிக்சி அடுத்து வரும் நூறு நபர்களுக்கு ஊராட்சி தலைவர் சார்பாக டிப்பன் பாக்ஸ் வழங்கப்பட்டது .இதே போன்று சருதுபட்டி ,லட்சுமிபுரம் ,வடபுதுப்பட்டி ,அந்நஞ்சி ஏ .புதுப்பட்டி ,தாமரைக்குளம் ,வடுகபட்டி,மேல்மங்கலம் ,ஜெயமங்கலம் ,குள்ளப்புரம் ,சில்வார்பட்டி ,தேவதானப்பட்டி ,கெங்குவார்பட்டி ,மற்றும் அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது .நேரம் ஆகஆக வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளீயே வராமல் உள்ளனர் .அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனால் மக்களும் ஆர்வமாக அந்தந்த தடுப்பூசி முகாம்களுக்கு சென்றனர் .ஆனால் பெருமபாலான இடங்களில் போதுமான அளவுக்கு தடுப்பு மருந்து வரவில்லை .பொதுமக்களும் அதிகாரிகளும் புலம்புகின்றனர்