தேனாம்பேட்டை பகுதியில் ரூ.4 லட்சம் பணம் பறித்துச் சென்ற வழக்கில் 3 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப் பட்ட நிலையில் 1 தலைமறைவு குற்றவாளி கைது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெரு, எண்.81 என்ற முகவரியில் வசித்து வரும் மைதீன் ராவுத்தர் வ/37, த/பெ. சாகுல் அமீது என்பவர் கடந்த 20.01.2023 அன்று இரவு தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி எதிரில் உள்ள தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில், பணம் செலுத்த சென்ற போது, அங்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் மேற்படி மைதீன் ராவுத்தரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து மைதீன் ராவுத்தர் E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஜான்ஜெய்சிங், வ/43, த/பெ.தேவதாஸ், எண்.16, சிமெண்ட் ரோடு, பெத்தானியா கார்டன், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை 28.01.2023 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4,300/- மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2.ரமேஷ், வ/29, த/பெ.ஆறுமுகசாமி,எண்.382, நாவலர் குடியிருப்பு, தண்டையார் பேட்டை என்பவரை கடந்த 17.02.2023 அன்றும் 3.சங்கர், வ/36, த/பெ.ரவி, எண்.8/22, பெரியார் நகர் அவுசிங் போர்டு, திருவான்மியூர், சென்னை என்பவரை 16.03.2023 அன்று கைது செய்து அவரிடமிருந்து ரூ.30,000/-, பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகிருந்த ஷாருக்கான், வ/26, த/பெ.முகமது ஹனிபா, எண்.31, ராஜீவ்காந்தி மெயின் ரோடு, R.K.நகர், தண்டையார் பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »