தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் திருவொற்றியூர், மாட்டு மந்தை மேம்பாலம் அருகே கண்காணித்த போது, அவ்வழியே ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில், சட்டவிரோதமாக குட்கா, கடத்தி வந்த 1.திலக் (எ) மணிரத்னம், வ/28, செல்லபாண்டி, வினோபா நகர் 10-வது தெரு, தண்டையார் பேட்டை, சென்னை, 2. மாரிசெல்வன், வ/39, தர்மராஜ், நேதாஜிநகர் 1வது தெரு, தண்டையார் பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் மேற்படி எதிரிகள் ஒரு கிடங்கில் குட்கா பாக்கெட்டுகளை மொத்தமாக பதுக்கி வைத்து, இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றுகடைகளில்விற்பனைசெய்ததுதெரியவந்தது.
அதன்பேரில், அவர்களிடமிருந்தும், அவர்கள் கிடங்கில் மறைத்து வைத்திருந்த என மொத்தம் 500 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மேற்படி ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் திலக் (எ) மணிரத்னம் மற்றும் மாரிசெல்வன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.