சென்னை, பல்லவன் சாலை, சத்தியமூர்த்தி நகர், 7வது தெருவில் வசிக்கும் கார்த்திக் (எ) மாமா கார்த்திக், வ/22, த/பெ.மணி என்பவர் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உட்பட சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், கார்த்திக் கடந்த 11.02.2022 அன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால், கார்த்திக்கடந்த 16.02.2022 அன்று வீட்டினருகே கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டு D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்குஉட்படுத்தப்பட்டார்.
எதிரி கார்த்திக் 1 வருட காலத்திற்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணைஆணையாளர், P.பகலவன், மேற்படி எதிரி கார்த்திக் என்பவருக்கு, கு.வி.மு.ச. பிரிவு 107 கீழ்பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து, மீதமுள்ள 353 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறைதண்டனை விதித்து இன்று (03.03.2022) உத்தரவிட்டார்.
அதன்பேரில்,எதிரி கார்த்திக் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.