சென்னை, திருவல்லிகேணி, முத்துருனிசா பேகம் 7வது தெருவில் வசித்து வந்த முகமது பயாஸ் (எ) முகமது பாக்கர், வ/23, த/பெ.முகமதுவாஜித் என்பவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சில நபர்களுக்கும் இடையே நேற்றுமுன்தினம் (27.12.2021) இருசக்கர வாகனம் நிறுத்துவதில் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (28.12.2021) காலை முகமது பயாஸ் (எ) முகமது பாக்கர் பால் பாக்கெட் வாங்க தனது வீட்டிற்கு வெளியில் சென்றபோது அவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் முகமது நூர் (எ) முகமது நூர்த்தீன் மற்றும் அவரது சகோதரர் காஜா மொய்தீன் மற்றும் அவர்களது நண்பர் ரஹீம் ஷிரிப் ஆகிய 3 நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மேற்படி 3 நபர்களும் சேர்ந்து திருவல்லிகேணி, ஆதம் மார்க்கெட் உள்ளே மேற்படி முகமது பயாஸ் (எ) முகமது பாக்கர் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த இரத்த காயமடைந்த முகமது பயாஸ் (எ) முகமது பாக்கர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து, முகமது பயாஸ் (எ) முகமது பாக்கரின் தந்தை முகமதுவாஜித் என்பவர் D-1 திருவல்லிகேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பலத்த இரத்த காயமடைந்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முகமது பயாஸ் (எ) முகமது பாக்கர், வ/23 என்பவர்சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (28.12.2021) இறந்து விட்டதால் மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்கு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது.
D-1 திருவல்லிகேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.முகமது நூர் (எ) முகமது நூர்த்தீன், வ/25, த/பெ.ஹயாது பாட்ஷா, எண்.1, ஔலியா சாகிப் 7வது தெரு, திருவல்லிகேணி, சென்னை 2.ரஹீம் ஷிரிப், வ/24, த/பெ.நாசர் செரிப், எண்.23/11, தாயார் சாகிப் தெரு, அண்ணா சாலை, சென்னை ஆகிய இருவரும் நேற்று (28.12.2021) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முகமது நூர் (எ) முகமது நூர்த்தீன் என்பவரின் சகோதரர் 3.காஜா மொய்தீன், வ/27, த/பெ.ஹயாது பாட்ஷா, எண்.1, ஔலியா சாகிப் 7வது தெரு, திருவல்லிகேணி, சென்னை என்பவர் இன்று (29.12.2021) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மேற்படி குற்றவாளிகளிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.