திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம் விழிப்புணர்வு ஊர்வலம் வட்டாட்சியர் சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கொரோனா நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரூராட்சி சார்பில் காவல்துறை மருத்துவத்துறை வருவாய்த்துறையினர் சுகாதாரத்துறை உள்ளிட்டோர் ஒன்றிணைந்து மெகா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் சண்முகம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் களம்பூர் வட்டார மருத்துவர அலுவலர் டாக்டர் சுந்தர் பேருராட்சி செயல் அலுவலர் முஹம்மத் ரிஸ்வான் முன்னிலையில் ஊர்வலம் போளுர் நகர் பகுதியில் 4 பிரிவாக பிரிந்து அனைத்து வார்டுகளிலும் விழிப்புணர்வு ஊர்வலம் சென்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் .
ஊர்வலத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் மருத்துவத் துறையினர் சுகாதார துறையினர் துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.