திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் ஆரணி காந்தி சாலையில் செல்போன் பழுது நீக்கும் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை….

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கேசவ நகரை சேர்ந்த தீப்சிங் வ-28 த-பெ ஜெய்சிங் என்பவர் ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள BGM வணிக வளாகத்தில் தனக்கு சொந்தமாக ஜெய் அம்பாய் என்ற பெயரில் செல்போன் பழுது நீக்கும் கடை வைத்திருப்பதாகவும், இரவு விற்பனை முடித்துவிட்டு வழக்கமாக கடையை பூட்டிவிட்டு சென்றாதாகவும், அடுத்த நாள் கடையை திறந்து பார்க்கும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையிலிருந்த செல்போன் உதிரிபாகங்கள்  மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆரணி நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார். உத்தரவுப்படி, ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மேற்பார்வையில், ஆரணி நகர காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர் தருமன் மற்றும் தனிப்படை காவலர்கள் மேற்படி சம்பவம் நடந்த இடத்தில் உள்ள CCTV காட்சிகளை ஆராய்ந்தும் மற்றும் திருவண்ணாமலை சைபர் கிரைம் காவல் நிலையத்தின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 1.ஜாலம்சிங் ரத்தோர் வ-27, த.பெ இந்தர் சிங், சோனா போர்டா, பின்மால் தாலுக்கா, ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம். 2. விக்ரம்சிங் வ-34, த.பெ மாதாஜி ராஜ் புரோகித், பியாரேஜ் கிராமம், பின்மால் தாலுக்கா, ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம்.3. ரகுல் சிங் வ-30, த.பெ பவணி சிங், சோனா போர்டா கிராமம், பின்மால் தாலுக்கா, ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் மூவரும் ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி பேருந்து நிலையத்தின் அருகில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தனிப்படை காவலர்கள் குற்றவாளிகளை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 1) மொபைல் காம்போ LED 525 , மொபைல் டச் ஸ்கிரின் 1100 , மற்றும்  3) மொபைல் டிஸ்பிளே 30  ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு. மேற்படி குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »