திருவண்ணாமலை ஆரணி வட்டத்தில் 2000 குடும்பங்கள் விவசாயம் செய்ய மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்…

திருவண்ணாமலை ஆரணி வட்டம் களம்பூர், மற்றும் சோழந்தாங்கள் ஏரியிலிருந்து வரும் கோடிநீர் நெல்வாய்பாளையம். புலவன்பாடி . அரையாளம்,மருசூர், ஆகிய ஏரிகளுக்கு செல்லும் குடிநீர் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் தூர்வாருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், நெல்வாய்பாளையம் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்களது மனுவில் தெரிவிக்கையில் களம்பூர் சித்தேரி கோடிநீர் களம்பூர் சோழந்தாங்கள் ஏரி நிரம்பி அந்த ஏரியில் இருந்து  விழும் கோடிநீர் நெல்வாய்பாளையம் புலவன்பாடி அரையாளம். மருசூர். செல்லும் நீர் இப்பொழுது சோழந்தாங்கள் ஏரியின் கீழ் உள்ள நிலங்களுக்கு பாசன வசதி அமையப்பெற்று இருந்தது. இந்நிலையில்கடந்த 25 வருடங்களாக மேற்கண்ட ஐந்து ஏரிகளுக்கு நீர் வருவது இல்லை மற்றும் சோழந்தாங்கள் ஏரி நீர் வரத்து கால்வாய் வழியாக நெல்வாய் பாளையம் ஏரி நீர் வரத்து கால்வாயில் அக்கிரமங்கள் உள்ளதால் 25 வருடங்களாக தூர் வாராததால் கால்வாய் துரத்திவிட்டு நிலையில் உள்ளது.

இதனால் தொடர்ந்து அக்கிரமங்கள் செயல்பட்டு வருவதால் களம்பூர் சித்தேரி கோடிநீர் சோழந்தாங்கள் ஏரிக்கு வராததால் நெல்வாய்பாளையம், புலவன்பாடி ,அரையாளம். மருசூர் ஆகிய ஏரிகளுக்கு கடந்த 25 வருடங்களாக நீர்வரத்து இல்லாததால்  ஏரிபாசன விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சூழ்நிலை உள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் கிராமங்களுக்கு நிலத்தடி நீர் குறைந்தால் குடிநீருக்காக சிரமப்பட வேண்டிய சூழ்நிலையும் . ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய எந்த தடையின்றி களம்பூர் சித்தேரி சோழந்தாங்கள் ஏரியிலிருந்து  நெல்வாய்பாளையம் ஏ ரி வரையிலும் வரத்து கால்வாய்கள் அக்கிரமங்களை அகற்றி. உடனடியாக தூர்வாரி மேற்கண்ட ஏரிகளுக்கு நீர் நிரம்பினால்  2000 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும். மற்றும் நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »