திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவண்ணாமலை வட்டார அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். விழாவில் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் பாராளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுத்துறை அதிகாரிகள் நகர மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.