மதுரை முதல் போடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உசிலம்பட்டி வரை முழுமையாக நிறைவடைந்துள்ளன.
மதுரை முதல் போடி வரை அனைத்து ரயில்வே லெவல் கிராசிங்கள் சுரங்கபாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அந்தவகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே வடபழஞ்சிக்கும் செல்லும் ரயில்வே கிராசிங் சுரங்கபாதையாக மாற்றப்பட்டுளது. ஆனால் சுரங்கபாதையாக மாற்றப்பட்டும் எவ்வித பலனில்லை, ஏனென்றால் ரயில்வே சுரங்கபாதை முழுவதும் குளம்போல் நீர் தேங்கி உள்ளது. மேலும் சுரங்கபாதை இருபுறமும் செடிகொடி புதர்மண்டி பாம்பு உள்ளிட்ட பூச்சிகளின் இருப்பிடமாக மாறி உள்ளது.
வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் ரயில்வே பாதையை தாண்டிதான் செல்லும் சூழ்நிலை உள்ளது. எனவே மதுரை மாவட்ட நிர்வாகம் சுரங்கபாதையிலுள்ள நீரை அகற்றி பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் காமராசர் பல்கலைக்கழகம் அருகே பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் தூசி மண்டலமாக காட்சியளிக்கிறது.