திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு…..

கன்னியாகுமரி –

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் 42
பணிகளை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் முன்னிலை
வகித்தார்.

பின்னர் ஆணையர் குமரகுருபரன், தெரிவித்ததாவது:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு
தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் புணரமைப்பு பணிகள் மேற்கொள்வது
குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனடிப்படையில் கடந்த 20
மற்றும் 21ம் தேதிகளில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன், இரண்டு நாட்கள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டார். சில தினங்களுககு; முன்பு ஆய்வு செய்ததன் அடிப்படையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கட்டமைப்பது, கோவில் வளாகத்தில் உள்ள பகுதிகளை நந்தவனமாக்குவது, மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை சரி செய்து பராமரிப்பது 42 பணிகள் நடைபெற உள்ளது.

அதனடிப்படையில் முதற்கட்டமான கோவிலில் பழுதடைந்த கழிப்பறைகளை பழுது
நீக்கி பராமரிப்பது என மற்றும் கோவிலை சுற்றியுள்ள கட்டட இடிபாடுகளை
அகற்றும் பணிகளும் காலியான பகுதிகளை நந்தவனம் ஆக்குதற்கான
பணிகளும் நடைபெற்று வருகிறது. கோவில் அன்னதான மண்டபம், இடும்பன்
மண்டபம் மற்றும் கோவில் சுற்றுப் பிரகார பகுதிகளை ஆய்வு செய்து தொடர்ந்து
பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் வரும்
காலங்களில் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் வழிவகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளரர் ராஜா, திருச்செந்தூர் செயல் அலுவலர் இப்ராகிம், வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »