மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இவ்வங்கியில் செக்காணுரணியை சேர்ந்த காந்தீபன் என்பவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கொடிக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் இவர்க்கு நன்மதிப்பு உள்ளது.
இந்நிலையில் திமுக அரசுக்கு களங்கம் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நேர்மையாக பணிபுரியும் அதிகாரியின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும் ஒருசிலர் கிராம மக்களை தூண்டிவிட்டு பினாமி பெயரில் கடன் பெற்று தள்ளுபடி செய்து முறைகேடு செய்துள்ளதாகவும் விவசாயிகளுக்கு விவசாயக்கடன் தர மறுப்பதாகவும், கருவேலம் நிறைந்த இடத்திற்கு விவசாய கடன் கொடுத்துமுறைகேடு செய்வதாகவும் எனவே பணியிடமாற்றம் செய்யக்கோரி கூட்டுறவு வங்கி லை முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டனர்.
ஆனால் காந்தீபன் என்பவர் வேண்டுமென்றே நற்பெயரை கெடுக்கும் வகையில் வீண்பழி சுமத்தி வருகின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக வேதனையுடன் கூறுகிறார். நான் எந்த ஒரு முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார் என்று கூறுகிறார்.
இதுபோல் விழிப்புணர்வு இல்லாமல் கேட்பார் பேச்சை கேட்டு செயல்படும் கிராம மக்களுக்கு அரசின் சாதனைகள் செயல்திட்டங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அதிகாரிகளின் வேண்டுகோளாக உள்ளது