திண்டுக்கல் மாவட்டம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி

ஒட்டன்சத்திரம் –  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 100 சதவீதம் தடுப்பூசி போட மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை , தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை , தொழில் துறை அலுவலர்களால் முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் 71,000 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது .
 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணையின்படி 01.08.2021 முதல் தொழிற்சாலைகளில் தடுப்பூசி செலுத்திய தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு அமர்த்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் , இது தொடர்பாக குழு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது . அதன்பேரில் , திண்டுக்கல் , தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் , தொழில்துறை உதவி இயக்குநர் , வருவாய் அலுவலர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினால் , பழனி பகுதியில் உள்ள செங்கல் சூலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தாத தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதற்கும் , முகக்கவசம் அணியாமலும் , கிருமி நாசினி பயன்படுத்தாமலும் , தொழிற்சாலை நிர்வாகத்தினர் கொரோனா தடுப்பு செயல்முறை ஆணைகளை மீறியதற்காக தொழிற்சாலை ஒன்றுக்கு ரூ .5,000 வரை 8 தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது .


மேலும் , ஆய்வின்போது , தடுப்பூசி செலுத்தாமல் பணிபுரிந்த தொழிலாளர்களை உடனடியாக அருகில் உள்ள தடுப்பூசி செலுத்தும் முகாம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி தடுப்பூசி செலுத்த வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர் . தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டது என்றும் , தடுப்பூசி செலுத்தாத தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த மாட்டோம் என்று சுயஉத்திரவாதமும் , தடுப்பூசி செலுத்தாத தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படமாட்டாது என்று அறிவிப்பு பலகை தொழிற்சாலை நுழைவு வாயிலில் மாட்டியதன் விபரத்தினை திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவிக்க வேண்டும் .  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »