திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி மற்றும் காப்பிளியபட்டி ஊராட்சிகளில் மக்களை தேடி வருவாய்த்துறை சிறப்பு முகாம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின்
படி நடைபெற்றது. இம்முகாமிற்கு தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கே.வி.முருகானந்தம், காப்பிளியபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ரா.சிவபாக்கியம் ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
முன்னதாக சிறப்பு முகாமினை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மு.முத்துச்சாமி துவக்கிவைத்தார். இதில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.அய்யம்மாள் முருகன், கலந்து கொண்டு பேசினார். இம்முகாமில் சின்னாக்காம்பட்டி பிர்கா வருவாய் ஆய்வாளர் பாண்டிமணி, ஒட்டன்சத்திரம் பிர்கா வருவாய் ஆய்வாளர் பத்மாவதி, மண்டல துணை வட்டாட்சியர்கள் விஜயகுமார், ராமசாமி, வட்டவழங்கல் அலுவலர் பிரசன்னா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு அரசு அலுவலர்கள் விவசாயிகள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இம்முகாமில் நத்தம் பட்டா மாறுதல், உட்பிரிவு திருத்தம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், நீக்கல், சேர்த்தல், திருத்தம் முதியோர் உதவித்தொகை விதை மற்றும், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம், உள்ளிட்டவைகள் கோரிக்கை மனுக்கள் பெறப் பெற்று அவைகளுக்கான தீர்வு காணப்பட்டது.