திண்டிவனம் – சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா, கிருஷ்ணன், சிபிசக்கரவர்த்தி. இவர்கள் ஆண்டுதோறும் திண்டிவனம் பகுதியில் உள்ள வெள்ளரி வியாபாரிகளிடம் முன்பணம் கொடுத்து வெள்ளரி விளைந்தவுடன் அவற்றை வாங்கி செல்வது வழக்கம் . இதே போன்று இந்த ஆண்டும் வெள்ளரி வியாபாரிகளுக்கு பணம் கொடுப்பதற்காக காரில் 30 லட்ச ரூபாயை எடுத்து வந்துள்ளனர். அவர்கள் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது நான்கு இரு சக்கர வாகனங்களில் 8 பேர் வந்து காரின் குறுக்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு காரின் கண்ணாடியை உடைத்து 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர் . இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் காரில் சென்றவர்களிடம் கத்தி முனையில் 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டார்.