திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக துவக்கப்பட்ட ஐஸ்வர்யா சூப்பர் ருசி பால் ஏஜென்சியை விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் அலி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்புவிழா நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சேதுநாதன், மாவட்ட பிரதிநிதி ஜெயபால், ஆசிரியர் கண்ணன், வழக்கறிஞர்கள் என்.ரமணன், அசோகன், கே.சி.ஆதித்தன், கௌதம், கே.எஸ்.அன்சாரி, சின்னதுரை, மாறன், சின்னா ராஜேந்திரன், சு.வெ.வெங்கடேஷ், ஆனந்த், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.