தமிழ்நாட்டின் கலை வடிவங்கள்

G.Yuvaneshwar

தமிழ் என்பது மொழியில் மட் டும் தொன்மையானது அல்ல. அதனுடைய கலை வடிவங்களும் அதற்க்கு இணையானதாகும். அந்த கலை வடிவங்கள் இயல், இசை, நாடகம் என்று முன்று வகையாக பிரிக்கபட்டுள்ளது. இந்த முன்று பிரிவின்கீழ் பல்வேறு கிளை பிரிவுகள் உள்ளன. 

பாடல் கலை

அன்று தொட்டு இன்று வரை தமிழக பாடல் கலை நீக்கமற நிறைந்துள்ளது. பாடல் என்பது வெறும் கலையாக மட்டும் இல்லாமல் வாழ்வியலை குறிக்கும் செப்பேடுவாகவும் இருந்துள்ளது. புலவர்கள் பாடும் புகழாரம் பாடல் முதல் சாமானியன் பாடும் தெம்மாங்கு பாடல் வரை தமிழரின் சிறப்பை பதிவு செய் துள்ளது. அதுமட்டுமின்றி வரலாற்று சிறப்பையும் பாடல்கள் மூலமாக எளிதாக பல தலைமுறைகளுக்கு கடத்தலாம். பாடல்களில் புகழாரம் ,தாலாட்டு,வெற்றி, தெம்மாங்கு ,அயர்ச்சி, ஒப்பாரி என பல வகைகள் உண்டு. புகழாரம் என்பது ஒரு நபரை பற்றி புகழ்ந்து பாடுவது புகழாரம் ஆகும். தெம்மாங்கு 

சாமான்னியனின் வாழ்க்கையை பற்றி பாடுவது. ஒப்பாரி என்பது ஒருவர் இறந்த பின் அவர் வாழ்க்கைக்கு ஒப்பானவர் யாரும் இல்லை என்று வருந்தி பாடுவதாகவும், அயர்ச்சி பாடல் என்பது உழைக்கும் மக்கள் சோர்வு தெரியாமல் இருக்க பாடும் பாடல் ஆகும். தாலாட்டு பாடல் என்பது குழந்தை நித்திரையில் ஆழ்தத்துவதற்காக பாடும் பாடல். பக்தி பாடல் என்பது இறைவனின சிறப்பையும் இறைவன் மீது பக்தன் வைத்திருக்கும் அன்பை வெளிப் படுத்தும்  பாடல் ஆகும்.

நடனக்கலை

தமிழர்கள் நடனக்கலையில் சிறந்து விளங்கினார்கள். தங்களது உணர்வுகளை நடனத்தின் மூலமாக வெளிப்படுத்தினர். ஒயிலாட் டம் ,கரகாட்டம், தப்பாட்டம் என பல் வகை உண்டு. அனைத்திற்கும் வெவ்வேறு பயிற்சி முறைகள் உண்டு. 

கரகாட்டம் என்பது திருவிழா நேரத்தில் ஆடப்படும். இது தலையில் கரகத்தை சுமந்து நிலை தவறாமல் ஆடுவார். தப்பாட்டம்  இசையோடு சேர்த்து பயிற்றுவிக்கப்படும் நடன கலையாகும்.  இது மக்களின் மிகுந்த அபிமானத்தை பெற்ற நடனமாகும்.  ஆதி நடன  கலைகளில் ஒன்றாகும். மயிலாட்டம் என்பது அழகியலையும் நடனத்தையும் ஒன்றாக இணைக்கும்.

நாடகக்கலை

நாடகம் என்பது திரைப் படங்களின் முன்னோடியாகம். பல்வேறு கலைஞர்களை உருவாக்கும் களமாகும். வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்ணாடி, நாடகம் ஆகும்.  மேடை நாடகம் , பக்தி நாடகம், சுதேசி நாடகம் , புரட்சி நாடகம் கேளிக்கை நாடகம் என பல வகை உண்டு.  பக்தி நாடகம் இறைவன் மற்றும் புராண கதைகளை சார்ந்து நடத்தப்படும். சுதேசிய நாடகம் சுதந்திரத்தை நோக்கமாக கொண்டு நடத்தப் பட்டது. நம் நாட்டின் விடுதலைக்கு இவ்வகை நாடகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. புரட்சி நாடகம் என்பது சாமான்ணிய மக்கள் அதிகாரவர்க்கத்தை கேள்வி கேட்பதாக அமைந்தது. பல்வேறு சித்தாந்தங்கள் மக்களை அடைய வழி வகுத்துள்ளது.

தமிழக மக்கள் தமது கலைகளையும் தமது வாழ்வி௰ லையும் ஒருங்கிணைத்து வாழ்ந்துள்ளனர்.  இக்கலைகள் பொழுதுபோக்கு மகீழ்வுக்காக மட் டும் இல்லாமல் தமிழர்களின் சமுக முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்கு வகித்துள்ளது. கலையும் வாழ்வியலும் ஒரு நபரின் இ௫ பக்கங்கள் ஆகும். கலை இல்லாத சமூகம் வேரில்லாத செடி போல் வாடிவிடும் என்பதை இக்கட்டுரை மூலம் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »