தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ,நகர் /ஒன்றியம் சார்பாக திருவள்ளுவர் சிலை அருகில் மாபெரும் தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது .சத்துணவு ஊழியர்களை முழு நேர   அரசு ஊழியராக அறிவித்து பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் .ஓய்வு ஊதியமாக ரூ 9000- மும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய   ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களும் ஓய்வு பெறுவோர் சங்கம் கலந்து கொண்டனர் .இந்நிகழ்வில் கதிரேசன் லட்சுமி தலைமை தாங்கினார் .முன்னிலை நகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .ராஜேஷ்கண்ணன் ,ஜெரால்டு பரமேஸ்வரன் ,ஈஸ்வரன் ,தாஜுதீன்,சுப்புராஜ் ,ஆகியோர் கலந்து கொண்டனர் .மாவட்ட செயலாளர் சத்துணவு ஊழியர் சங்கம் ஜெயபாண்டி சிறப்புரையாற்றி நன்றியுரை கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »