தமிழக அரசின் சாதனை விளக்கம் & கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை செட்டிகுளம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக காணொளி…

தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகள் பேரூராட்சிகள், நகராட்சிகள் & மாநகராட்சிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வாகனம் மூலம் காணொளி வாயிலாக திரையிட்டு வருகிறது.

அந்தவகையில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஊமச்சிகுளம் அருகே செட்டிகுளம் கிராமத்தில் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக தமிழக அரசின் சாதனைகள், கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு காணொளி வாயிலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இதை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

இதில் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கோதை மலைவீரன், துணை தலைவர் உமாதேவி அரிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »