கன்னியாகுமரி – மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் தூர்வீர்சிங் வயது (36) இவர் மும்பையில் உணவகம் நடத்திவருகிறார். இவருடைய தந்தை மனீந்தர் சிங் காந்தி 2019 ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தொலைவை குறிப்பிட்ட மணி நேரத்தில் கடந்து லிம்கா சாதனை படைக்க முயற்சித்தார். அவரது பயணம் திடீர் உடல் நலக்குறைவால் தடைபட்டது.
இந்த நிலையில் தந்தையால் முடிக்க முடியாமல் போன சாதனையை தான் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 10ஆம் தேதி அதிகாலை 4 .45 மணிக்கு ஜம்மு காஷ்மீர் லே பகுதியில் தனது கார் பயணத்தை தூர் வீர் சிங் காந்தி தொடங்கினார் அதை ஸ்ரீ நகர் போலீஸ் துணை ஆணையர் தானே கில் தொடங்கி வைத்தார் அங்கிருந்து பஞ்சாப் புதுடில்லி மத்திய பிரதேசம் மராட்டியம் கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா வழியாக நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் கன்னியாகுமரியில் சாதனை பயணத்தை நிறைவு செய்தார். துணைக் கண்காணிப்பாளர் நிறைவு செய்து வைத்தார்
கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா பயணத்தை நிறைவு செய்து வைத்தார். இப்பயணம் குறித்து தூர் வீர் சிங் காந்தியிடம் பேசும்போது என் தந்தை இறந்துவிட்டார் அவர் நினைவாக இந்த சாதனையை செய்துள்ளேன். இந்த சாதனை பயணம் லிம்கா இப்புத்தகத்தில் இடம் பிடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது 3.739 கி மீ தொலைவினை 56 மணி நேரம் 20 நிமிடம் கடந்து உள்ளேன். இதற்கு முன்பு 56 மணிநேரம் என்ற சாதனையை இதன் மூலம் முறியடித்து உள்ளேன் என்று பெருமிதம் கொண்டுள்ளார்.